கோவை : தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சதீஸ்குமார் கம்பெனியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த போது, வெல்டிங் எந்திரம் திடிரென வெடித்து தீ பிடித்தது. இதில் சதீஷ்குமார் உடலிலும் தீப்பிடித்து காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காயம் அதிகமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாரின் சகோதரி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் உரிய பாதுகாப்பின்றி பணி செய்ய நிர்பந்தம் செய்ததாக அந்நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0