கோவையில் மொத்த விற்பனை துணிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் பொருட்கள் திருட்டு..!

கோவை ஆர். எஸ். புரம், டி.வி சாமி ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்பானி (வயது 62) இவர் ஒப்பணக்கார வீதியில்உள்ள ஒருவணிக வளாகத்தில்டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் டைரக்டராகவும் இருந்து வந்தார்.இவருக்கும் பிரவீன் குமார், விஜய மதி ஆகியோருக்கும்தொழில் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இந்த நிலையில்பிரவீன் குமார் விஜயவதி ஆகியோர் அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்ததுணிமணிகள்,கட்டிங் எந்திரங்கள், மேஜை, நாற்காலி, பீரோ, மின்விசிறிகள், விளக்குகள், வெள்ளி காசுகள் ,பாஸ்புக் பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ 20 லட்சம் இருக்கும். இது குறித்து ராஜ்குமார் மல்பானி வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் பிரவீன் குமார், விஜயவதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.