கோவை, துடியலூர் சேரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சத்தியமூர்த்தியின் நண்பரான எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷா குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். மேலும் அவர் துடியலூர் பேருந்து நிலையத்தில் பாத்திரக்கடை வைத்து உள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி வீடு வாங்க திட்டமிட்டு இருந்தது நண்பன் ஹசன் பாதுஷாவு க்கு தெரிய வந்தது. அவருக்கு நிறைய இடங்கள் தெரியும் உடனே வீடு வாங்கி தருவதாக கூறி உள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது மனைவி ஆர்த்தியுடன் சகஜமாக பேசி பழகி வந்து உள்ளார். மேலும் அவரது தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்ட ஹசன் பாதுஷா அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி ரூபாய் 2 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் அவரை 2 வது திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். இது குறித்து கணவன் சத்தியமூர்த்திக்கு தெரிய வர கணவன் – மனைவி இருவரும் வாங்கிய பணத்தை திரும்பி தருமாறு கேட்டு உள்ளனர். அதற்குத் தர மறுத்த ஹசன் பாதுஷா தான் எஸ்.டி.பி.ஐ கட்சியில் உள்ளதாகவும், அனைத்து இடத்திலும் செல்வாக்கு உள்ளதாகவும், அவரை ஒன்றும் செய்ய முடியாது என கூறி தர மறுத்து உள்ளார். இது குறித்த கணவன் – மனைவி துடியலூர் உள்ள ஜமாத்தில் புகார் அளித்தனர். பின்னர் உக்கடம் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் வைத்து பேசி பணத்தை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டு உள்ளார் ஹசன் பாதுஷா . பின்னர் சத்தியமூர்த்தி மனைவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த கணவர், மனைவியின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு குடியே றினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சத்தியமூர்த்தி துடியலூர் பகுதிக்கு வந்து உள்ளார். அப்பொழுது அவரைப் பார்த்த ஹசன் பாதுஷா அவரையும் அவரது மனைவியும் பிரித்து விடுவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தாக்கி உள்ளார். அதில் சிறிய காயம் ஏற்பட்ட சத்தியமூர்த்தி இது குறித்து மனைவி மற்றும் அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். இந்நிலையில் கணவர் – மனைவி க்கு இடையே மேலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இந்நிலையில் சத்தியமூர்த்தியின் மனைவியிடம் ஹசன் பாதுஷா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வா இருவரும் சேர்ந்து வாழலாம் என கூறியதாகவும், தனக்கு தெரியாமல் பணத்தைப் பெற்று தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, மனைவியை பிரித்து நடுத் தெருவில் நிறுத்திய ஹசன் பாதுஷா மீது நடவடிக்கை எடுக்க துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி ஹசன் பாதுஷாவை கைது செய்து, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண். 1 ல் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் கோவை மத்திய மாவட்ட செய்தி தொடர்பாளர் மன்சூர் அலி நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளித்துள்ளார்.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த ஹசன் பாதுஷா என்பவர் ஒரு வழக்கு சம்பந்தமாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் SDPI கட்சி பிரமுகர் என்று செய்திகள் வெளியிடப்பட உள்ளதாகவும் அறிகிறோம்.
மேற்குறிப்பிட்ட ஹசன் பாதுஷா அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதன் காரணத்தினால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் தற்போது அவர் கட்சியின் நிர்வாக பொறுப்பிலோ அல்லது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எந்த பொறுப்பிலோ நீடிக்கவில்லை என்பதை இதன் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.