கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் -மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி கணவருக்கு ரூ 2 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கும் மாறு தீர்ப்பு வழங்கினார். மேலும் அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 80 ஆயிரம் ரூபாயை நோட்டாக கொடுக்காமல் ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் நாயணங்களை 20 மூட்டைகளில் கொண்டு வந்த அந்த நபர் நீதிபதி முன்னிலையில் கொடுத்தார். அதை கண்டு நீதிபதி நாணயங்கள் மூட்டையை கொண்டு போய் நோட்டாக மாற்றி வருமாறு அறிவுரை வழங்கினார். இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார் பின்னர் அந்த நபர் நாணயங்களை தனது காரில் எடுத்து சென்றுவிட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0