கோவையில் காரில் 120 கிலோ குட்கா கடத்தி வந்த மளிகை கடைக்காரர் கைது மற்றும் கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்..!

கோவை: குட்கா பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை துடியலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல் மற்றும் போலீசார் இடிக்கரை ரோடு டீச்சர் காலனி சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குட்காவை விற்பனைக்காக காரில் கடத்தி வந்த சோமனூர் பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் ஜெகன் அந்தோணி ராஜேஷ் (வயது 39) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 120 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ஜெகன் அந்தோணி ராஜேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற ரகுகுமார் (30) என்பவரை ஆழியார் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற சூலூரை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பிரவைசர் பாலசுப்பிரமணி (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.