கோவை கோட்ட வனப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த யானை -மனித மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை கோட்ட வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பின்படி 150 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக உள்ளன. ஆனால் இடம்பெயர்ந்து செல்லும் யானைகள் தான் கோவை கோட்ட வன பகுதிக்கு அதிக அளவில் வருகின்றன. அந்த யானைகள் மலையடிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதுடன், விவசாய பயிர் களையும் சேதப்படுத்தி வருகிறது . இதன் காரணமாக யானை – மனித மோதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது .அந்த வகையில் கடந்த ஆண்டு 14 பேர் யானை தாக்கியதில் பலியாகி உள்ளனர். இந்தாண்டில் இதுவரை 3பேர் உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில் கடந்த 18 மாதத்தில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 17 பேர் பலியாகி உள்ளனர். இது போன்று யானைகளுக்குள் நடந்த மோதல், நோய், முதுமை உள்ளிட்ட காரணங்க ளுக்காக கோவை கோட்ட வனப்பகுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 23 காட்டு யானைகளும், இந்த ஆண்டில் இதுவரை 6 யானைகளும் உயிரிழந்துள்ளன. அதை வைத்து பார்க்கும் போது கடந்த ஒன்றரை ஆண்டில் 29 காட்டு யானைகள் உயிரிழந் துள்ளன. காட்டு யானைகள் மலையடிவார பகுதிக்குள் புகுவதை தடுக்க அகழி வெட்டுவது, அகழியை ஆளப்படுத்துவது, வன எல்லையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணித்துஅவற்றை வனப்பகுதிக்குள் துரத்துவது போன்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் காரணமாக காட்டு யானைகளின் அட்டகாசம் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0