ஆத்துார் வட்டத்தில், உங்களைத் தேடி,உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டு, ஆத்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆதிலட்சுமிபுரத்தில் அங்கன்வாடி மையம், எஸ்.பாறைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், இடைநின்ற மாணவ, மாணவிகள் எவரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவிகளிடம் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். சீவல்சரகு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கான அலுவலக அறை கட்டுமான பணிகள், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், எஸ்.பாறைப்பட்டி மற்றும் 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், ஆத்துாரில் ரூ.2. கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டிடம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் நர்சரியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள், அக்கரைப்பட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் ஆத்துார் முதல் கோம்பை வரை அக்கரைப்பட்டி வழியாக செல்லும் சாலையில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் பாலம் கட்டுமான பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆத்துாரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படும் மாணவர் விடுதி மற்றும் மாணவிகள் விடுதி ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆத்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோ சனை மேற்கொண்டு, அலுவலர்களின் ஆய்வு அறிக்கையை பார்வையிட்டார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் இரா.சக்திவேல், ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன், ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தட்சணாமூர்த்தி, ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் ஜானகி மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.