ஆவடி காவல் ஆணையரகத்தில் அமைச்சுப் பணியாளர்கள் குடும்பத்தினரின் பிள்ளைகள் மற்றும் போலீசாரின் மாணவ செல்வங்களுக்கும் கல்வி உதவித் தொகை – கமிஷனர் சங்கர் வழங்கினார்.!!

70 மாணவர்களின் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு ஏற்ப தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து அவர்கள் பயிலும் கல்விக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டிற்கான காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மகன் மகள் உயர்கல்வி பயில்வதற்காக காவலர் சேம நல நி தியிலிருந்து நூற்றாண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஆவடி போலீஸ் கமிஷனர் சமூக சேவகர் கி. சங்கர் தலைமையில் நடந்தது போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் போலீஸ் அதிகாரிகளின் வாரிசுதாரர்கள் பயிலும் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு 5 பேருக்கும் பொறியியல் மாணவர்கள் 17 பேருக்கும் கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் 43 பேருக்கும் டிப்ளமோ மாணவர் ஒருவருக்கும் மற்றும் இதர படிப்பை பயிலும் 4 பேருக்கும் மாணவ மாணவிகள் மொத்தமாக 70 பேருக்கும் ரூபாய் பத்து லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் போலீஸ் கமிஷனர் சங்கர் வழங்கினார் இந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்