கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் இன்று மாலை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி்சீனிவாசன், தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்று. கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும், புல்வாமா தாக்கு தலில் உயிரிழந்தவர்களுக்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த கூட்டத்தில் பேசிய
தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் 27 வது ஆண்டு அஞ்சலி கூட்டத்திற்காக இங்கு சேர்ந்துள்ளோம், 27 ஆண்டுகளாக எதற்கு இதை திரும்ப திரும்ப மக்களுக்கு கூற வேண்டும் என கேட்கின்றனர்.நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது எனவும் இந்த கொடுஞ்செயல் மக்கள்மனதில் இன்னமும் ஆழமாக இருக்கின்றது, கோவையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் அனைவரும் பா.ஜ.கவினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல, மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பா.ஜ.க எனவும் தெரிவித்தார். இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம் என தெரிவித்தவர். இந்து கோவில்களுக்கும் வழிபாட்டிற்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் எந்த அரசியல் கட்சியும் வாயை திறப்பதில்லை ஆனால், பா.ஜ.க பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றது என்கின்றனர்.இதை வெளிநாடுகளில் யாரும் நம்ப மாட்டார்கள் என தெரிவித்த அவர் நாட்டை பிரிப்பார்கள், மத கலவரம் செய்ய போகின்றனர் என பா.ஜ.கவை பேசுகின்றனர். அரசியலில் வெற்றி பெற மத வாதத்திற்காக கையில் எடுப்பதாக சொல்கின்றனர் எனவும் பா.ஜ.க பிரிவினைவாதம் செய்கின்றது என பேசும் கட்சிகள் எனது தொகுதிக்கு வாருங்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்ன வெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுகின்றோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடும் மாறுபாடும் காட்டுவதில்லை
பா.ஜ.க கட்சி மத கலவரத்திற்காக அல்ல எனவும் தெரிவித்தார். தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும் அது வரை தொடரந்து உழைப்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா நம்மை அடிப்பவர்களை நாம் மறந்து விடுகிறோம் நாட்டிற்கு உள்ள ஆபத்தை நாம் உணர்வது இல்லை என தெரிவித்தார்.
கோவை மக்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், வெடிகுண்டு சம்பவத்தை ஆண்டு தோறும் நினைவு அஞ்சலி மேற்கொண்டு வருவது பாராட்டதக்கது எனவும் தெரிவித்தார்.
திமுக அரசு வில்லன்கள் ஹீரோவா காண்பித்து வருகிறது, திமுக அரசு வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்கின்றது எனவும் இசுலாமியர் வாக்குகள் வேண்டி இதை செய்கிறார் என்றால் வெட்கக்கேடானது எனவும்,வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழ்ந்த அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள். கோவை வெடிகுண்டு சம்பவதிற்கு அல் உம்மா பாட்ஷா வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக இருந்தவர்.பயங்கரவாதி பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு 5 கிலோ மீட்டர் அனுமதி கொடுத்துள்ளனர். காவலர் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவலர்கள் வைத்து சல்யூட் அடிக்க வைத்து உள்ளனர் எனவும் தமிழக காவல்துறை திமுக அரசு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். திமுக அரசின் வாக்கு வங்கி அரசியல் காரணமாக தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது ஆனால் 2014 மோடியின் ஆட்சிக்கு பிறகு வெடிகுண்டு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்த அவர்
திமுக மாடல் தீவிரவாதிகளை விடுதலை செய்வது தான் என தெரிவித்தார். பாஜகவிற்கு உறுதுணையாக இருப்பது , தீவிரவாததிற்கு எதிராக இருப்பதாக அர்த்தம் 2026 ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்றால் தீவிரவாத சம்பந்தப்பட்ட அனைத்து இயக்கங்கள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை இங்கு உறுதி அளிக்கிறேன் என தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார். பெங்களூரில் இருந்து அடுத்த ஆண்டு ஆயிரம் காலணிகள் அண்ணாமலைக்கு கொடுக்கப்படும், அப்போது திமுக அரசு ஆட்சியில் இருக்காது என தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் மே21 ம் தேதி தீவிரவாத எதிர்ப்பு நாள் அனுசரிக்க வேண்டும் அது தமிழகத்தில் கடைபிடிப்பதில்லை என தெரிவித்தார்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லி கொண்டு இருக்கின் றீர்கள் என தெரிவித்த அவர் தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றார். பிரதமர் மோடி ஆட்சிக்கு அமைந்தவுடன் மக்களின் உயிர்,உடமை ஆகியவற்றை காப்பாற்றுவது கடமை என செயல்படுகின்றார் என்றும் 2014 ல் இருந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்றவர் சீனா,பாகிஸ்தான் இரு நாடுகள் வந்தாலும் கூட அதை சமாளிக்க நாம் தயாரக இருக்கின்றோம் எனவும் பிரான்ஸில் இருந்து நீர்முழ்கி கப்பல் வாங்கி இருப்பதாகவும் வெளிநாடுகளில் இருந்து டிரோன் வாங்கி இருக்கின்றோம் என தெரிவித்த அவர்
கடுமையாக உழைத்து கொடுக்க கூடிய ஓவ்வொரு வரிப்பணமும் மக்கள் பாதுகாப்பிற்கு செலவிட படுகின்றது என தெரிவித்தார். பா.ஜ.கவிற்கு வாக்கு அளித்தால் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்த அவர் ஆம் ஆத்மியை டெல்லியில் மண்ணை கவ்வ வைத்து பா.ஜ.க வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றது.27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் ஆட்சியை பிடித்து இருக்கின்றோம் என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கின்றேன் எனவும் தமிழகத்தில் 200 சீட் வாங்குவோம் என சொல்லி கொண்டு இருப்பது இனி நடக்காது.2026ல் தமிழகத்தில் திமுக ஆட்சி மண்ணோடு மண்ணாக,வேரோடு துடைத்து ஏறியப்படும் எனவும் தமிழகத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். முதல்வர் இன்னும் கோவை குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லி கொண்டு இருப்பதாகவும் பள்ளி கூடத்தில் கூட்டு பலாத்காரம், கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை,ஆட்டோ-அரசு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பில்லை .இது கடந்ந சில மாதங்களில் நடைபெற்ற சம்பவங்கள். இங்கு பாதுகாப்பு இல்லை என மக்கள் புரிந்து கொண்டு இருக்கின்றனர்.ஆனால் 200 இடங்களை பிடிப்போம் என 23 ம் புலிகேசி போல பேசிக்கொண்டு இருகின்றார் முதல்வர் ஸ்டாலின் எனவும் விமர்சித்தார். பாட்ஷாவை அப்பா அப்பா என ஒரு அரசியல்வாதி சொல்கின்றார்.இறந்த 58 பேருக்கு அப்பா இல்லையா ? இஸ்லாமிய சிறைகைதிகள் கஷ்டப்படுகின்றனர் என ஒரு அரசியல்வாதி சொல்கின்றார். சீமானும், திருமாவளவனும் இந்த அரசியலை செய்து வருகின்றனர். ஓட்டு பிட்சை எடுக்க வந்துள்ள அரசியல்வாதிகளை புறந்தள்ள வேண்டிய கடமை இருக்கின்றது என்ற அவர்
இந்த ஆட்சி மோசமான ஆட்சியை நடந்திக்கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் இங்கு அஞ்சலி நிகழ்ச்சி நடக்கும் எனவும் திமுகவிற்கு ஓரே ஒரு எச்சரிக்கை ,
குரங்கு கையில் ஆப்பத்தை கொடுத்த மாதிரி இஸ்லாம், கிறிஸ்டின் என இரு அப்பங்களை வைத்திருக்கின்றது. வருங்காலத்தில் குரங்கும் இருக்காது அப்பமும் இருக்காது சிறுபான்மை என்ற சமூகம் திமுகவை வெளியில் தூக்கி போட்டுவிடும் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.