15ஆம் தேதி முக்கிய அறிவிப்பு… சஸ்பென்ஸ் வைக்கும் ட்ரம்ப்… எதிர்பார்ப்பில் உலக நாடுகள்..!

வம்பர் 15ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்த டெனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் 2020 ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

ஆனால் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததால் புதிய அதிபராக ஜோபைடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே 2024 ஆம் வருடம் நடைபெற இருக்கின்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிட அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் இன்று பேசிய ட்ரம்ப் நான் வரும் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஃப்ளோரிடா மார்-ஏ-லகோவில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் வருடம் நடைபெற இருக்கின்ற நிலையில் அவர் போட்டியிடப் போவது பற்றி ஏதேனும் தகவலை தெரிவிப்பாரா அல்லது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருக்கின்ற நிலையில் தான் மீண்டும் ட்விட்டரில் இணைவது பற்றி ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா என்ற பல்வேறு விதமான கேள்விகள் எழும்பியுள்ளது. மேலும் இந்த கேள்விகளுக்கு வருகிற 15-ம் தேதி பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.