நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் “பிரஸ் கவுன்சில்” அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும்,அங்கீகார அட்டை பெறுவதற்காக கடந்த ஆண்டு திருத்தப்பட்ட விதிகள் வெளியிடப்படும் எனவும்,உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் குறுகிய காலத்தில் இந்த பணிகள் முடிக்கப்படும் எனவும் தமிழக செய்தி,மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பிரஸ் கவுன்சில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.