பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்.

கோவை மார்ச் 3 அரசு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்குஒருமுக்கியமான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-
ஆசிரியர்கள் 12 வருட காலங்கள் கற்பித்திருக்கிறார்கள். காலாண்டு அரையாண்டு திருப்புதல் தேர்வுகள் என எழுதி நிறைய பயிற்சி பெற்று இருக்கிறீர்கள். ஆகவே பயம் வேண்டாம். பதற்றம் வேண்டாம். தேர்வு மையத்திற்கு காலை 8.45 மணிக்கு சென்று சேரும் வகையில் வீட்டில் சீக்கிரமே தயாராகி புறப்பட்டு விடுங்கள். படித்தவற்றை அசை போட்டுக் கொண்டே இருங்கள். சிக்கலான கடினமான விடைகள் கருத்துகளை (concepts) கடைசி நேரத்தில் கூட நண்பர்களோடு பேசுங்கள். “பளிச்” சென ஒரு புரிதல் ஏற்படும். மதிப்பெண் பெற்றுத் தரும்.காலை 9.30 மணிக்கு அழைப்பு மணி அடிக்கும். தலைமை ஆசிரியர் தேர்வர்கள் அனைவரையும் அழைத்து அறிவுரைகள் வழங்குவார்.
கூர்ந்து கவனியுங்கள். அதன்படி செயல்படுங்கள்.. தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உங்களிடமும் அன்புடனும் கனிவுடனும் நடந்து கொள்வார்கள். அதே வேளை நாம் 100% கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் பரிசோதித்து அனுமதிப்பார்கள். பெல்ட் & காலணிகளை அறைக்கு வெளியில் விட வேண்டும். சாதாரண மணி மட்டும் காட்டும் கைக்கடிகாரம் மட்டுமே அனுமதிப்பார்கள். (Digital Watch அணிய வேண்டாம். 9 -.45 – 10.00 மணி உங்கள் மேசைக்கு அடியில் சாக்லேட் பேப்பர் or துண்டுத்தாள் (Bit Paper) ஏதும் உள்ளதா ? என பரிசோதித்து … அவ்வாறு இருப்பின் 10 மணிக்கு முன் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விடுங்கள். (மிக மிக முக்கியம், யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பாதிக்கப்படக் கூடாது) 10 மணிக்கு கேள்வித் தாள் பெற்ற உடன் உங்கள் தேர்வு எண்ணை எழுதி 10.10 வரை 10 நிமிடம் கேள்வித் தாள் முழுவதையும் பொறுமையாக வாசித்து விடுங்கள். (10 நிமிடம் Silent Reading Time – முழு அமைதி)
கேள்வித்தாளில் உங்கள் Register Number தவிர வேறு எவ்வித குறிப்புகளும் எழுதக் கூடாது.
நீங்கள் படித்த கேள்விகள் நிறைய வந்திருக்கும். மகிழ்ச்சி ஒன்றிரண்டு கேள்விகள் நீங்கள் படிக்காத கேள்விகளும் வந்திருக்கலாம். பரவாயில்லை. பதற்றம் வேண்டாம். 10.10 மணிக்கு விடைத்தாள் தருவார்கள்.
உங்கள் விடைத்தாளில்
உங்கள் பெயர்
உங்கள் Photo
உங்கள் Reg. No.
உங்கள் பாடம்
உங்கள் Medium
தேர்வுத் தேதி ஆகிய 6 விடயங்களும் சரியாக உள்ளதா ? முதன்மை கண்காணிப்பாளர் Signature உள்ளதா? உங்கள் விடைத்தாளில் 30 பக்கங்கள் (Tamil and English = Ruled / All other Subjects = Unruled) வரிசையாக சரியாக உள்ளதா ? என்பதை சரிபார்த்து உங்கள் photo க்கு கீழ் உங்கள் Signature போடவும். Biology பாடத்திற்கு மட்டும் 14 + 4 + 14 = 32 பக்கம் என இரண்டு Main Booklets ம் இடையில் ஒரு Bio – Botany க்கான Additional Sheet ம் இருக்கும். Accountancy பாடத்திற்கு 14 Unruled Pages-ம் 16 Accountancy pages -ம் என 30 பக்கங்கள் இருக்கும். 10.15 மணிக்கு 5 Times மணி அடிக்கும். தேர்வு எழுத தொடங்கலாம். முதலில் தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை எழுதி முழு மதிப்பெண்கள் பெற முயலுங்கள். நிதானமாக அழகாக குண்டு குண்டாக விடைகளை எழுதுங்கள். ஒவ்வொரு விடை எழுதி முடித்தவுடன் அடிக் கோடு போடுங்கள். கேள்வி எண்களை மறக்காமல் சரியாக எழுதுங்கள்.
சரியாக விடை தெரியாத கேள்விகளை கடைசி அரை மணி நேரத்தில் யோசித்து அறிந்தவரை தெரிந்தவரை விடை எழுதுங்கள்.. 10.45 11.15 11.45 12.15 12.45 என அரை மணி நேரத்திற்கு ஒரு மணி என 5 முறை மணி அடிப்பார்கள். மதியம் 1.10 மணிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிப்பார்கள்.
கூடுதல் விடைத்தாள் பெற்றிருந்தால் துளையிட்டு நூல் கொண்டு 1.10 மணிக்கு கட்டி விட்டுத்தான் …மேலும் விடை எழுத விரும்பினால் தொடர வேண்டும். சரியாக 1.15 மணிக்கு நீண்ட மணி அடிக்கும் போது விடை எழுதுவதை நிறுத்தி விடைத்தாளை ஒப்படைக்க வேண்டும். அறைக் கண்காணிப்பாளர் உங்கள் அறையில் உள்ள 20 பேரின் விடைத்தாள்களை சேகரித்து …. சரிபார்த்து … ok …. புறப்படுங்கள் என கூறும் வரை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் அமைதியாக காத்திருக்க வேண்டும்.
விடைகளை தவறாக எழுதி அடித்திருந்தால் “மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது ” என மட்டும் எழுத வேண்டும். (Sign or Reg.No. போட கூடாது. விடைத்தாளின் எந்த இடத்திலும் உங்கள் பெயர் & தேர்வு எண் எழுதக் கூடாது. Rough work ஏதும் செய்வதானால் விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன் படுத்தவும். கருப்பு மற்றும் ஊதா ஆகிய இரண்டு வண்ண பேனாக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அலைபேசி கொண்டு வரக்கூடாது. துண்டுத்தாள் வைத்திருப்பது…. அனைத்து விடைகளையும் அடித்து விடுவது … போன்ற செயல்களை செய்யக் கூடாது அவ்வாறான செயல்கள் ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு உங்கள் Result நிறுத்தி வைக்கப்படும்மேலும் அடுத்த 2 அமர்வுகள் பொதுத்தேர்வு எழுத உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.தன்னம்பிக்கையுடன், துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.