KAVAL UDHAVI APP – ன் முக்கியத்துவமம்…

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தை மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி Student Police Cadet மாணவர்களுக்கு காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளான மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் அனைத்து பிரிவுகளை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது இணையவழி குற்றப்பிரிவு (Cyber Crime), குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு, தனிப்பிரிவு (SB Office), காவல் கட்டுப்பாட்டு அறை (Control Room), மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு (DCRB) மாவட்ட குற்றப்பிரிவு (DCB), Cyber Cell மற்றும் CCTNS ஆகிய பிரிவுகளின் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் அப்பிரிவினை பற்றியும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஆய்வாளர் காவல் நிலைய செயல்பாடுகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., காவல்துறையின் அனைத்து நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் இணையவழி பிரச்சனைகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் அதை எவ்வாறு தடுக்கலாம் எனவும் பெண்கள் உதவி எண்-181 குழந்தைகள் உதவி எண்-1098 சைபர் கிரைம் உதவி எண்-1930, KAVAL UDHAVI APP குறித்த முக்கியத்துவங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.