கோவை இருகூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வீரப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் பெயிண்டர். இவரது மகன் சோமநாத் ( வயது 24)தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இருகூர் ராம் நகரைச் சேர்ந்தவர் மன்மதன் என்ற மதன் ( வயது 47) இவர அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாகவும்|பக்தர்களுக்கு அருள் வாக்கும் சொல்லி வந்தார். இவருக்கு உதவியாக சோம்நாத் இருந்து வந்தார். இந்த நிலையில் மார்க்கெட் ரோட்டில் உள்ள மதன் வீட்டில் சோம்நாத் நேற்று முன் தினம் தங்கினார். நேற்று காலையில் சோம்நாத் தலையில் காயத்துடன் இறந்து கிடப்பது தெரியவந்தது . அவரது உடல் அருகே ஒரு கல் கிடந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் சோம்நாத் தின் அக்கா மீனா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவருடன் தங்கி இருந்த மன்மதன் என்ற மதன் தரன் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது .இதை யடுத்து இருகூரில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனக்குநள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று சாமிஅருள் வந்ததாகவும், அப்போது அப்போது சோம்நாத்தைகொலை செய்யுமாறுஅந்த ஆவி எனக்கு கட்டளையிட்டது.அதனால் அருகில் கிடந்த கல்லை எடுத்து சோம்நாத் தலையில் போட்டேன். அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகி றார்கள்..இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0