பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் , சேலம் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பிரதமர் ஆற்றிய திட்டங்கள் குறித்து நடந்த விளக்க கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசிய போது, தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக அதிக முறை நான் கைது செய்யப்பட்டு இருக்கிறேன். இது வேதனையாக இருக்கிறது. காவல்துறையின் அடக்குமுறை கேவலமானது. காஷ்மீரை விட தமிழகம் கேடுகெட்டு போய்விட்டது. இங்கு சட்டம் ஒழுங்கு கேடுகெட்டு போகிறது.
ஒரு சதவிகித இஸ்லாமியர்கள் செய்யும் மோசமான செயல்களினால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கவலை தெரிவித்தார்.
அவர் மேலும், எங்கள் கட்சியினர் என்னை பார்த்து நீங்கள் எம்பி ஆகி விடலாம், எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று சொல்வார்கள். ஆனால் நான் கத்தியின் மீது நடக்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். எப்போது வேண்டுமானாலும் நான் படுகொலை செய்யப்படுவேன். அப்படி படுகொலை செய்யப்படும் போது என் உயிர் பிரியும் போது கூட இந்துத்துவா என்கின்ற உயரிய சித்தாந்தத்தினை நான் கைவிட மாட்டேன் .
திமுகவினரின் அச்சுறுத்தலாலோ காவல்துறையினரின் மிரட்டலாலோ என் உயிர் பிரியும் போது கூட இந்துத்துவா என்கின்ற உயரிய சித்தாந்தத்தினை நான் கைவிட மாட்டேன் என்று அழுத்தமாகச் சொன்னார்.