ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார்.
அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அம்மாவை பொருத்தவரைக்கும் நல்லா இருந்தாங்க. அவங்களுக்கு தெரியும். அதிமுக பொறுப்பில் யார் இருந்தா சரியா வரும் அப்படிங்குறது அவங்களுக்கு தெரியும். அந்த வேலைகளும் நடந்துகிட்டு தான் இருந்துச்சு. ஆனா திடீர்னு உடம்பு முடியாமல் போய்விட்டது. மெட்ரோ ட்ரெயின் திறப்பு விழாவில் கடைசியா கலந்துகிட்டாங்க. நாங்க யாருமே எதிர்பார்க்கல. அம்மாக்கு இப்படி நடந்துடுச்சு. எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்.
வழக்கில் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பெல்லாம் எப்படி இருக்குன்னு நீங்களே புரிஞ்சிப்பீங்க ? அதுல நான் பெங்களூர் செல்ல வேண்டிய இருந்த சமயத்தில் கூட. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருக்க வச்சிட்டு போனும் என்கின்ற என்னோட முயற்சியை தான் நான் செஞ்சிட்டு போனேன். அதனால இப்பவும் சொல்றேன். அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலையும், ஏதும் அசைக்க முடியாது என்கிறத திரும்ப தைரியமா சொல்றேன் என தெரிவித்தார்.