குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால்.. கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள காளியாபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் முருகேஷ் ( வயது 26) கூலித் தொழிலாளி. திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது.மனைவி பெயர் காளீஸ்வரி. குழந்தைகள் இல்லை குடும்பத் தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து பெற்றோரிடம் வசித்து வருகிறார் .முருகேஷ் குடிபழக்கம் உடையவர்.இதனால் வாழ்க்கையில் வெப்படைந்து அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் ..இது குறித்த அவரது தந்தை காளிமுத்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.