கோவையில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கொண்டையம் பாளையம், செங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 19)காளிபாளையம், செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 29) தொழிலாளி. சிவரஞ்சனியும் கதிர்வேலும் உறவினர்கள் . இவர்கள் கடந்த 20 22- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கதிர்வேல் வரதட்சணை கேட்டு சிவரஞ்சனியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரது தாய் வீட்டுக்கு துரத்தி விட்டார். இதை யடுத்து கதிர்வேல் கோபியை சேர்ந்த ஒரு பெண்ணை 2 – வது திருமணம் செய்து கொண்டாராம் .இது பற்றி தகவல் அறிந்த சிவரஞ்சனி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கதிர்வேல் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.