கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் வசிப்பவர் சாமிநாதன் என்ற சாமியாடி ( வயது 42)டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது சொந்த ஊர் கமுதி .கடந்த 10 ஆண்டுகளாக பன்னிமடையில் வசித்து வருகிறார்.சாமியாடியின் மனைவிக்கும், மதுரை மாவட்டம் ,மேலூர் தெற்கு வீதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் ( வயது 33)என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதை சாமியாடி பலமுறை கண்டித்தார்.இருவரும் கேட்கவில்லை. இந்த நிலையில் ஜெய் கணேஷ் தனதுகாதலியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் பன்னிமடைக்கு வந்திருந்தார்.இதைப் பார்த்து சாமியாடி ஜெய் கணேசை கண்டித்தார்.பின்னர் ஜெய்கணேஷ் அங்கிருந்து சென்று விட்டார் .கே.என்.ஜி. புதூர் ,தடாகரோடு சந்திப்பில் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது சாமியாடி அங்கு சென்றுஜெய் கணேசை கத்தியால் மார்பில் குத்தினார்.அதே இடத்தில் ஜெய் கணேஷ் இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினார்கள். கொலையாளியை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் கணுவாயில் பதுங்கியிருந்த சாமியாடி என்ற சாமிநாதனை தனிப்படை போலீசார் நேற்று மாலை சுற்றி வளைத்து கைது செய்தனர் . அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்
What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink1