திருச்சியில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த 01.07.2024-ம் தேதி முதல் நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்தும் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வழக்கறிஞர்கள் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிக்கு வந்து கண்டன பேரணியில் கலந்து கொண்டனர். அரசியலமைப்புக்கு எதிராக சமஸ்கிருத மொழியில் பெயர் வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ள இந்த 3 சட்டங்கள் கலையப்பட வேண்டும். என்ற கோரிக் கையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான ராஜேந்திர குமார் மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் மூத்த வழக்கறிஞர்கள் மகேந்திரன் ராஜேந்திரன் லட்சுமணன் திலீப் அஸ்வின் குமார் சிக்கல் சண்முகம் விக்னேஷ் சுப்பிரமணியன் கோகுல் வனஜா சிவகாமி சுகன்யா முருகையா அல்லூர் பிரபு மற்றும் ஏராளமான காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.