திருச்சி பீமநகரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பத்திர பதிவுத்துறை கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட வைகளை கண்டித்தும், போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்ட விழ்த்து விட்டு மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறி ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் அதிமுக தில்லைநகர் பகுதி செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதோடு வீட்டு வரி உயர்வு, பத்திர பதிவுத்துறை கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, உள்ளிட்ட மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதோடு தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பெண்கள் நலன் பாதிக்கப்படும் வகையில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் நல்லு சாமி வார்டு செயலாளர்கள் சீனிவாசன், குமார் மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் அப்பா குட்டி தில்லை விஸ்வா மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்