குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  ஆகியோர் துவக்கி வைத்து, 628 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். உடன் ஆணையர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கொ.வீரராகவராவ் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் , உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்