கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிராஜ் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பெயரில் சிறுமுகை வரச்சரகர் மனோஜ் மற்றும் காப்பக வனத்துறையினர் இணைந்து சிராஜ் நகர் பகுதியில் உள்ளகுறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு யானை தந்தங்களை பதுக்கி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே வனத் துறையினர் அந்த யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் யானை தந்தைகளை பதுக்கி வைத்திருந்ததாக மேட்டுப்பாளையம் சேர்ந்த கவுஸ் மைதீன் (வயது 47) சத்தியமங்கலம் ரவி ( வயது 47) வீரன் என்ற ஆண்டிச்சாமி ( வயது 47) கிருஷ்ணகுமார் ( வயது 36) குமார் ( வயது 45 )ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0