இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு ரூ. 4ஆயிரம் அபராதம்.

கோவை நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ 1000 பரிசு என்று சமூக வலைதளத்தில் கடந்த 20 21 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பதிவிட்டதாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 5-வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று இந்த வழக்கில் அர்ஜுன் சம்பத் நீதிபதி சந்தோஷ் முன் ஆஜராகி சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அர்ஜுன் சம்பத்துக்கு ரூ. 4 ஆயிரம்அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.