உயர்ரக போதை பொருள் விற்பனை – 2 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி ,சப் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு ,சாய்பாபா காலனி எம்ஜிஆர் மார்க்கெட் அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகபடும் படிநின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா, 12 கிராம் “மெத்தபட்டமின் ” என்ற உயர்ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சின்னியம்பாளையம் சி.ஏ.பி வீதியைச் சேர்ந்த ராமராஜன் மகன் ஜெகத் ஹரி என்ற சக்தி (22) குனியமுத்தூர், மணிகண்டன் நகர் முரளி மகன் சுமேஷ் ( 27) என்பது தெரியவந்தது. சாந்தகுமார் என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவரை தேடி வருகிறார்கள்.