தமிழ்நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Disclaimer