கோவையில் ஹெல்மெட் திருட்டு கும்பல் கைது. 30 ஹெல்மெட் பறிமுதல்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சிவா ( வயது 24) இவர் ஆர் எஸ் புரம் , புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முன் தனது பைக் நிறுத்தி இருந்தார். பைக்கில் ஹெல்மெட்டை வைத்துவிட்டு சாமான்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஹெல்மெட்டை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும். இது குறித்து சிவா ஆர். எஸ். . போலீசு புகார் செய்துள்ளார். இதே போலபெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராம பாண்டியன் ( வயது 26)அதே வணிகவளாகம் முன்நிறுத்தி இருந்த தனது பைக்கில் ஹெல்மெட்டை தொங்க விட்டிருந்தார் அதை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து க .ராமபாண்டியன் ஆர். எஸ். புரம் .போலீசில் புகார் செய்தார்.இதே போலகோவையில் பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி,ராஜவீதி,டி கே மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 30 ஹெல்மெட்டுகள் திருட்டு போயிருந்தது. இதை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாகதுப்பு துலக்கி தெலுங்குபாளையம் டெக்ஸ்டூல் காலனியை சேர்ந்தகண்ணன் மகன் ராம்குமார் (வயது 29) செல்வபுரம் தில்லைநகரை சேர்ந்தசுப்பிரமணியன் மகன் சரவணன் ( வயது 33) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 30 ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.