தலைவர் கலைஞர் மீதான அதே அன்போடு என்னை வரவேற்றார் என லாலுபிரசாத் யாதவ் உடனான சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார்.
பீகார் முதல்வரும் ஜனதா ஜன கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பாஜாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் திமுக சார்பாக கலந்து கொள்ள உள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனி விமானம் மூலம் பாடினா புறப்பட்டார். அங்கு அவர் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், முதுபெரும் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவரது இல்லத்தில். தலைவர் கலைஞர் மீது அவருக்கு இருந்த அதே அளவு பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று, சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார். அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளோடு இருக்க வாழ்த்தினேன். நாளை (இன்று) வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற உள்ளது. என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.