நீலகிரி மாவட்ட பா.ஜ.க சிந்தனையாளர் அணி தலைவர் வழக்கறிஞர் கருணாநிதி அவர்கள் கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை மனதார ஏற்று, தானும் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பி, நீலகிரி மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவால யத்தில் மாவட்ட தி.மு.க., செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து தன்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டார். தேர்தல் பணி செயலாளர் அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் முன்னிலை வகித்தார். அப்பொழுது மாவட்ட திமுக செயலாளர் இவரை கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து திமுக கழகத்திற்கு வரவேற்றார்,
நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார், மாவட்ட பொருளாளர் ஏ.நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.திராவிடமணி, எஸ்.காசிலிங்கம், நெல்லியாளம் நகர செயலாளர் மு.சேகரன்,பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அமிர்தலிங்கம், எம்.சதக்கத்துல்லா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ந.சிவசுப்ரமணியம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளிதரன், நெல்லியாளம் நகர கழக நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் சேகர், யுகேஷ், முகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0