மகளைக் காதலித்து கைவிட்டதால் தற்கொலை. காதலனை குத்தி கொலை செய்த தந்தை – மகன் கைது.

கோவை; நீலகிரி மாவட்டம் கூடலூர் பக்கம் உள்ள பந்தலூர், சேரன் கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 25 )இவர் துடியலூரில் ஸ்ரீ லட்சுமி மருத்துவமனையில் கடந்த 1 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தனது தாயின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஐயன் கொல்ல கொண்டன் கிராமத்துக்கு அடிக்கடி செல்வார். அங்கு ஆனந்தி என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது ,இருவரும் 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.இந்த நிலையில் காதலி ஆனந்தியை திருமணம் செய்ய தமிழ்ச்செல்வன் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த காதலி ஆனந்தி கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தனது மகளை காதலித்து கைவிட்டதால் தற்கொலை செய்து கொண்டதை எண்ணி ஆத்திரமடைந்த ஆனந்தியின் தந்தை மலைக்கனி ( வயது 47)அவரது மகன் ராஜாராம் (வயது 25)ஆகியோர் மகளின் சாவுக்கு காரணமாக இருந்த தமிழ்ச்செல்வனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.இதற்காக ராஜபாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் துடியலூர் வந்தனர்.நேற்று மருத்துவ மனை முன் தமிழ்ச்செல்வன் வருகைக்காக காத்திருந்தனர் தமிழ்ச்செல்வன் அங்கு வந்ததும் மலைக்கனி, ராஜாராம் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைசர மாரியாக குத்தினார்கள்.இதில் பலத்த காயமடைந்தார். பின்னர் இருசக்கர வாகனத்தில் இருவரும் தப்பிச் சென்று விட்டனர். தமிழ்ச்செல்வனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து மலைக்கனி அவரது மகன் ராஜாராம் ஆகியோரை இன்று கைது செய்தார்.