கோவை; சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கரடியூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி தனலட்சுமி ( வயது 41) இவர் குறுமிளகு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு தொழில்ரீதியாக கோவை திரு.வி.க. நகரை சேர்ந்த கருப்புசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது அவர் அடிக்கடி குறுமிளகு வாங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தனலட்சுமியிடம் தொடர்பு கொண்ட கருப்புசாமி தனக்கு 2டன் குறுமிளகு அனுப்பி வைக்கும் படி கேட்டார் .அதன் பேரில் 2 டன் குறுமிளகுஅனுப்பி வைத்தார் .அதைப் பெற்றுக் கொண்ட கருப்புசாமி ரூ 14 லட்சத்துக்கு 2 காசோலையைதனலட்சுமியிடம் கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகளை தனலட்சுமி வங்கியில் செலுத்திய போது கருப்பு சாமியின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இது பற்றி அவர் கருப்புசாமியிடம் தெரிவித்தார். அதற்கு விரைவில் பணத்தை தருவதாக கருப்புசாமி கூறினார். ஆனால் பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை இது குறித்து தனலட்சுமி கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார்செய்தார். . புகாரில் கருப்புசாமி தன்னிடம் 2 டன் குறுமிளகு வாங்கி ரூ. 14 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும், அதற்கு அவரது மனைவி தேவி , அவரது சகோதரர் பாலமுருகன் மற்றும் முத்து மணி ஆகியோர் உடந்தையாக இருந்து ள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் பேரில் கருப்பசாமி அவரது மனைவிதேவி,பாலமுருகன் ,முத்துமணி, ஆகியோர் மீதுபோலீசார் மோசடிவழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy1
Sleepy0
Angry0
Dead0
Wink0