திருவாரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பணிபுரியும் காவலர்களின் மனநல மேம்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திட்டத்திற்கு ரூபாய் 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 1000 காவலர்கள் பயன் அடைந்தனர். இதனை தொடர்ந்து தென்மண்டலத்தில் பணிபுரியும் காவலர் நலனுக்காக ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரையில் 15.2.2024 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் காவலர் நலனி அக்கறை கொண்டு இது போன்ற புதுமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மதுரைக்கு அடுத்தபடியாக மத்திய மண்டல காவலர்களுக்கான மகிழ்ச்சி திட்டம் தொடக்க விழா நேற்று 2.8.2024 திருவாரூர் மாவட்டம் நீலக்குடி யில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கூட்ட அறையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் / படைத்தலைவர் சங்கர் ஜீவால் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி துவக்கி வைத்தார். மு ன்ன தாக மனநல ஆலோசனை குறித்தான கையேடு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவலர்கள் மனநல ஆலோசனை மையம் மூலமாக மீண்டு வந்தது குறித்து ஒவ்வொருவராக எடுத்துரைத்து காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம். கிருஷ்ணன் காவல்துறை தலைவர் நலன் நஜ் முல் ஹோடா மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் ஜியஹா உல்ஹக தமிழ்நாடு மகிழ்ச்சி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரும் மனநல நிபுணருமான டாக்டர் ராமசுப்பிரமணியன் மத்திய பல்கலைக்கழக பேராசிரியரும் மகிழ்ச்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான வி. வித்யா மத்திய பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஆர். திருமுருகன் மற்றும் சென்னை மகிழ்ச்சி தி ட்ட மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் டி. பிரபாகர் ஆகியோர் மகிழ்ச்சி திட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். தொடக்க விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம். கிருஷ்ணன் நலம் வி தைப் போம் என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இதில் பெண்களுக்கான இளைஞர்களுக்கான திறன் பயிற்சி மொழி பயிற்சி சுகாதாரம் மற்றும் குடும்ப சமூகத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும். மத்திய மண்டலத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்க24×7help line எண் வழங்கப்படும். இந்தத் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத் தலைவர் சங்கர் ஜீவா ல் அவர்கள் பேசுகிறியில் சென்னையில் காவலர் மகிழ்ச்சி திட்டம் தொடங்கிய போது 1000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு 600 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில்100 நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனைக்கு அவர்களாகவே முன்வந்து கலந்து கொள்ள ஊக்கப்படுத் தப்படுகிறார்கள். இவ்விடத்தின் மூலம் ஏராளமான காவல் துறையினர் பயன் பெற்றுள்ளனர் என்பது சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற மகிழ்ச்சி திட்டத்தின் மூலம் கண்கூடாக தெரியவந்துள்ளது. இது போன்ற திட்டங்களின் மூலம் ஒரு சிலர் பயன்பெற்றாலே ஈ டில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம் என்பது தன்னை மட்டுமின்றி தனது குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதால் இது போன்ற திட்டங்கள் மூலம் மன அழுத்தத்தில் உள்ள காவல்துறையினருக்கு நிரந்தர தீர்வு பெற முயற்சி எடுத்து வருகிறோம் என தெரிவித்தார். இந்த மகிழ்ச்சி திட்டம் சுமார் ஒரு வருட காலத்திற்கு நடைபெறும். இதில் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினரும் கலந்து கொண்டு பயன் பெறுவார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0