கோவை ஈச்சனாரி பகுதியில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை. செய்தனர். அதில் 210 கிலோ புகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ 2 லட்சம் இருக்கும். இது தொடர்பாக இதை கடத்தி வந்த திருப்பூர், அனுப்பர்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்த கார் டிரைவர் சரவணன் ( வயது 38) எஸ். எஸ். குளம். குரும்பபாளையம், வடக்கு வீதியைச் சேர்ந்த வியாபாரி முருகன் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0