கோவையில் பெட்டிக் கடைகளில் குட்கா விற்பனை. பெண் உட்பட 3 பேர் கைது

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று செல்வபுரம் தெற்கு அவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு குட்கா மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1. 15கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த செல்வபுரம் சேர்ந்த முஹம்மத் பாட்ஷா மனைவி சுரபி (வயது 60) கைது செய்யப்பட்டார்.இதேபோல கோவை புதூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடைகளில் குட்கா விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பக்கம் உள்ள புத்துரை சேர்ந்த இருளப்பன் (வயது 38 )சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ,ரோஜா நகரை சேர்ந்த நாகேந்திரன் மகன் கார்த்திக் செல்வம் ( வயது 18)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அங்கிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.