கோவை மாவட்டம்: பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63) ஓய்வு பெற்ற அரசு கண்டக்டர் .இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சேரன் நகர், பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து நடுப்புணியை நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையடுத்து ஆறுமுகத்தின் மனைவி வாசுகி இழப்பீடு வழங்க கோரி கோவை மோட்டார் வாகன விபத்து விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ 6 லட்சத்து 62 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த தொகையை வழங்கவில்லை. இதனால் வாசுகி தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை யடுத்து மனுவை விசாரித்த நீதிபதி மோகனாம்பாள் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து நேற்று கணுவாயில் இருந்து கோவை ரயில் நிலையம் சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்டது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0