அரசு பள்ளி ஆசிரியையிடம் செல்போனில் ஆபாச பேச்சு – போலீசில் புகார்..!

கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 36) இவர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் உமா மகேஸ்வரியிடம்ஆபாசமாக பேசி திட்டினாராம்.. இது குறித்து உமாமகேஸ்வரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பிரேமதாஸ் வழக்கு பதிவு செய்து தொடர்பு கொண்டவரை தேடி வருகிறார்.