அரசு ஊழியர் ஐக்கிய பேரவை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை திருச்சி மண்டலம் ஒருங்கிணைக்கும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் எதிரில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட பேரவை செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிதிச் செயலாளர் மருகரை கண்ணதா சன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர்கள் பழனிவேல், ராஜா, செல்வகுமார் கரூர் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அரியலூர் மாவட்ட செயலாளர் பாக்யராஜ்திருச்சி மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திரு மார்பன் சிறப்புரை யாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் பழங்குடி வகுப்பு அரசு பணியாளர்கள் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடைக்க இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 16 (4) A பயன்படுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் ஏற்றவும் தமிழ்நாடு அரசு துறையில் பட்டியல் பழங்குடியினருக்கு வழங்க வேண்டிய பின்னடைவு காலி பணியிடங்களை உடனே நிரப்புவது உட்பட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டதுமுடிவில் திருவரம்பூர் வட்டம் பேரவை தலைவர் சந்திரகுமார் நன்றி கூறினார்.