இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ராமநாத புரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ் காரும் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் ராதாகிருஷ்ணன்(55) , குத்தாலிங்க ம்(47) சின்ன முனியாண்டி (45) ஆகிய 03 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் இணைந்து விபத்தில் சிக்கியவர்கள் உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் காரில் வந்த கருமலை (35) என்பவர் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0