மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்ஷே சிங்கப்பூர் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில், விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றினர். இது போராட்டக்காரர்களின் வசம் சென்ற நிலையில் ரூபாவாகினி டிவியின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கோத்தபய ராஜபக்ஷே மாலத்தீவில் இருப்பதை அறிந்து, அந்நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விமானம் மூலம் சிங்கப்பூர் தப்பி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.