நீலகிரி மாவட்டம் உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் மூன்று நாள் நற்செய்தி பெருவிழாவை உதகை ஆயர் Dr. A அமுல்ராஜ் அவர்களின் நல்லாசியுடன், மறை மாவட்ட அருள்பணி ஸ்டீபன் லாசர் பொருளாளர் துவங்கி வைத்தார், மறைமாவட்ட நற்செய்தி பணிக்குழு இயக்குனர் அருட்பணி c வின்சென்ட் ஏற்பாட்டில் தியானம் நடைபெற்றது, வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களில் இறை செய்தி வழங்கி நற்கருணை ஆராதனைகள் ஜெப வழிபாடுகள் சிறப்பாக நற்செய்தி வழங்கியவர்கள் அருட்பணி வர்கீஸ், Vc, இயக்குனர்
ஏலாவூர் டிவைன் மெர்சி தியான இல்லம், அருட்பணி வில்லியம் பாஸ்கோ V. இயக்குனர் அம்பத்தூர் அருளாலயம் தியான மையம், ஆகியோர் மூன்று நாள் இறை செய்தியை வழங்கினர், நடைபெற்ற மூன்று நாள் தியானத்திற்கு நீலகிரி மறை மாவட்ட நற்செய்தி பனிக்குழுவோடு இணைந்து அனைத்து உதவிகளை ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், துணை பங்கு தந்தை ஜூட் அமலநாதன், அருட்பணி பிராங்கிளின் ஆகியோர் செய்து தந்தனர், நீலகிரி மறை மாவட்ட நற்செய்தி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின், செயலாளர் ஜான் ஆரோக்கியசாமி, பொருளாளர் ஜெரோம், மற்றும் மகளினர் இணைந்து நடைபெற்ற நற்செய்தி விழாவில் வருகை தந்த அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகள் மற்றும் தேனீரும், பன் போன்ற உணவு வகைகளை மக்களுக்கு வழங்கினர், மற்றும் நீலகிரி மாவட்ட பல பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர், நற்செய்தி பெருவிழா நிறைவாக உதகை தூய இறுதிய ஆண்டவர் பேராலய பங்குத்தந்தை ரவி லாரன்ஸ் மூன்று நாள் இறை செய்தியை அறிவித்த அருட்பணி வர்கீஸ் vc இயக்குனர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார், மற்றும் அருட்பணி வில்லியம்ஸ் பாஸ்கோ v, அவர்களுக்கு உதவி பங்குத்தந்தை பொன்னாடை போத்தி நன்றி தெரிவித்தார், மற்றும் ரோஸ் மவுண்ட் பங்குத்தந்தை அருட்பணி லியோ , லாரன்ஸ் ஆகியோருக்கு பொன்னாடை வழங்கி நன்றி தெரிவித்தனர்,நடைபெற்ற மூன்று நாள் தியானத்தில் பாடல்கள் பாடி இசைத்து மக்களை ஊக்கப்படுத்திய பாடகர் சகோதரர் ஜேம்ஸ் சென்னை அவர்களுக்கு நன்றி தெரிவித்து பொன்னாடை வழங்கினர், மற்றும் நற்செய்தி கூட்டத்திற்கு ஆடியோ அமைப்பு வழங்கிய சுரேஷ் ஆடியோ உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தனர், மற்றும் நற்செய்தி பெருவிழாவின் அனைத்து பணிகளை மூன்று நாளும் சிறப்பாக செய்த நீலகிரி மறை மாவட்ட நற்செய்தி பனிக்குழுவின் இயக்குனர் அருட்பணி C வின்சென்ட் மற்றும் அனைத்து தொண்டர்களுக்கு பங்குத்தந்தை பாராட்டும் நன்றியும் தெரிவித்தார், நீலகிரி பல பகுதியில் இருந்து வந்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது, நற்செய்தி பெருவிழா நிறைவாக நற்கருணை ஆராதனையும் சிறப்பு ஆசிர்வாதத்தோடு விழா நிறைவு பெற்றது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0