இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு முறையில் நல்ல முன்னேற்றம்-நிர்மலா சீதாராமன் பேச்சு…!

மத்திய நிதித்துறை அமைச்சர் மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலகவங்கி வருடாந்திர கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.

இதையடுத்து அவர் அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டங்களை முடித்துக் கொண்டு புறப்படும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியா -அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு முன்னேறி இருக்கிறது. இதில் இருதரப்பு உறவை எவரும் கேள்வி கேட்கவில்லை.

ஆகவே இரு நாட்டு உறவுகள் ஆழமடைந்துள்ளது. உக்ரைனியப் போருக்குப் பின் பல வாய்ப்புகள் அடுத்தடுத்து வெளிப்பட்டு வருகின்றன. “ரஷிய நாடு குறித்த உங்களின் நிலைப்பாட்டை நீங்கள் அளவீடு செய்துள்ளீர்கள். இதனால் நீங்கள் எங்களுடன் நெருங்கி வருவது போன்று தெரியவில்லை” என்ற அமெரிக்கவின் கருத்துக்கு அவ்வாறு இல்லை என்பதே இந்தியாவின் பதில் ஆகும். பல வருடங்களாக ரஷ்யாவுடன் கொண்டுள்ள உறவுகளைப் போன்றே, இந்தியாவிற்கு மரபு சார்ந்த சிக்கல்கள் இருக்கின்றன. ரஷ்யாவுடன் எங்களுக்கு ஒரு நேர்மறையான புரிதல் இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு அண்டை நாடுகளுடன் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வடக்கு எல்லையில் கொரோனா தொற்றுக்கு மத்தியல் பதற்றம் ஏற்படுகிறது. மேற்கு எல்லையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத பிரச்சனைகளை சந்திக்க இந்தியாவில் இருந்து கொடுக்கப்பட்ட உபகரணங்கள் எங்களை தாக்க திசை திருப்பப்பட்டது.

இப்படி பல்வேறு பிரச்சினைகள் இந்தியாவுக்கு இருக்கின்றன. இதன் காரணமாக ரஷ்யாவுடன் இந்தியா இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கிடையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. இந்தியா கண்டிப்பாக அமெரிக்காவுடன் நட்புறவை விரும்புகிறது” என்று அவர் தெரிவித்தார். அத்துடன் அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையில் காணொலி வாயிலாக முடிவடைந்த பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கினார்.