கேரளாவின் இடிக்கி மாவட்டத்தில் உள்ள வாழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிஜூ கேப்ரியல். இவரது 16 வயது மகள் நயன்மரியா.
வாழத்தோப்பு பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த இவர், புரோட்டா சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாம்மை (Allergy) காரணமாக இடிக்கி அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நயன்மரியா சிகிச்சை பலனின்றி நேற்று (பிப். 10) உயிரிழந்தார். இவருக்கு மைதா கோதுமையினால் செய்யப்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால், அவர் அதற்கென்று சிகிச்சை பெற்றுள்ளார். தனக்கு ஓரளவு அந்த பிரச்னை நீங்கிவிட்டதாக எண்ணி, அவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு சென்று, வேன்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.