திருச்சி விமான நிலையத்தில் டிராலி பேக் சக்கரத்தில் கடத்திய தங்கம்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் 16 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 225 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பயணம் செய்யும் சிலர் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது. கடத்தல் தங்கம் இந்த சூழலில், நேற்று கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று ஆண் பயணிகளை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 16 லட்சத்து 16ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 225 கிராம் தங்கத்தை டிராலி சக்கரத்தில் மறைத்துவைத்து கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.