கோவை ராமநாதபுரம் சுப்ரமணியம் விதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 60)இவர் கோவை அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று இவர் டவுன்ஹாலில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்கிவிட்டு அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பஸ்சை விட்டு இறங்கி பார்க்கும் போது பையில் அவர் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடிவிட்டனர்.இதுகுறித்து ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0