பூ வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு..

கோவை ராமநாதபுரம், மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மனைவி இந்திராணி ( வயது 61) இவர் ராமநாதபுரம் மருதூர், தபால் அலுவலகம் எதிர்ப்புறம் பூ வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம் பூ வாங்குவது போல ஒரு வாலிபர் வந்தார். பூக்களின் விலை என்ன ?என்று கேட்டுக் கொண்டிருந்தார்..திடீரென்று இந்திராணி கழுத்தில் கிடந்த 2பவுன் செயினை பறித்து விட்டு சற்று தூரத்தில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியுடன் தப்பி ஓடிவிட்டான்.இதுகுறித்து இந்திராணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய 2ஆசாமி கடை தேடி வருகிறார்கள்.