புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் கோவா மாநில உதய நாள் விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌதரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவா மாநிலத்தைச் சேர்ந்த – ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவம் & ஆராய்ச்சி மையத்தில் பயிலும் மாணவ-மாணவிகள், புதுச்சேரியில் வசிப்பவர்கள் சிலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவம் & ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர். செழியன், துணைப் பதிவாளர் டாக்டர். கணேசன், ஆரோவில் மையத்தைச் சேர்ந்த கலைஞர் துருபத், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் நந்திதா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கோவா மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0