பைக் விபத்தில் பெண் – வாலிபர் பரிதாப சாவு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள பொட்டாம்பட்டியை சேர்ந்தவர் பேச்சு முத்து. இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 18) இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை ரோட்டில் பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் மில் கேட் அருகே சென்ற போது அங்கு ரோட்டை கடந்த ஒரு பெண் மீது பைக் மோதி மோதியது. இதில் அந்த பெண்ணும் ,பைக் ஓட்டி வந்த சுரேஷ்குமாரும்படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். வழியில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் . பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.