கிறிஸ்துமஸ் பண்டிகை கீதபவனி.

கோவை; கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டுகிறிஸ்தவர்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் பாடல் பாடி ஜெபம் செய்வது வழக்கம். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து மகிழ் விப்பார்.கோவை மத்துவராயபுரம், சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் சார்பில்கிறிஸ்துமஸ் பவனி (கேரல் ரவுண்ட்ஸ்)நேற்று இரவு நடந்தது.இதை யடுத்து காருண்யா நகரில் உள்ள சீஷா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலாளர் ஞானபிரகாசம், பொருளாளர் செல்வன் ஜெயசிங் மற்றும் கோவை திருமண்டலக்குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஆனந்த் ஆசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.