ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிப்பு…

லகாபாத்: ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசமாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது. அங்கு இருந்த இந்து கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனால் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்தநிலையில் வாரணாசி ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு இந்துக்கள் பூஜை நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே விஷ்வேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர் குவிப்பால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.