கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள மாச்ச நாயக்கன்பாளையம்,பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் அய்யா சாமி ( வயது 71 )விவசாயி.இவரது தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் நேற்று மாலை அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக தோட்டத்து உரிமையாளர் அய்யா சாமி ,திம்மகுத்து கோவிந்தராஜன் (47) பாறை மேடு முருகன் ( 56 ) ஆத்து பொள்ளாச்சி குமார் ( 56) கோபால் ( 52 ) சுப் பேகவுண்டன் புதூர் ஜாகிர் உசேன் ( 47 )|திம்ம குத்து முருகேசன் ( 63 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட ரூ 11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல ராமபட்டினத்தில் கருப்புசாமி ( வயது 41) என்பவரதுவீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாகபோலீசுக்கு தகவல் வந்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டுவிளையாடியதாக ராமபட்டினம் கருப்புசாமி, மண்ணூர் முத்துக்குமரேசன் வயது ( 27)ஆர். கோபாலபுரம் விவேகானந்தர் ( 57 ) பாலக்காடு ரகுபதி (29) அம்பராம்பாளையம் பூபதி ( 47 ) வண்ணமடை கருணாமூர்த்தி ( 26 ) சந்தோஷ் குமார் ( 30) ராமநாதபுரம் தாமரைக்கனி ( 26 ) ஜலத்தூர் கருணாகரன் ( 36 ) ஜமீன் முத்தூர் காமாட்சி சுந்தரம் ( 28 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 54 ஆயிரத்து 930 பறிமுதல் செய்யப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0